\
‘ரஜினி என்னை தங்கச்சிலை என்றது வரம்’ - காலா கதாநாயகி

‘ரஜினி என்னை தங்கச்சிலை என்றது வரம்’ - காலா கதாநாயகி

‘ரஜினி என்னை தங்கச்சிலை என்றது வரம்’ - காலா கதாநாயகி
Published on: 

ரஜினிக்கு காலாவில் ஜோடியாக நடித்திருப்பவர் ஈஸ்வரி. தமிழில் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் மிகப்பெரிய கதாபாத்திரங்களில் நடிக்காதவர். காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருப்பதன் மூலம் மிகப்பெரிய கவனத்தை பெற்றிருக்கிறார் ஈஸ்வரி. 

இன்று நடைபெற்ற காலா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஈஸ்வரி, காலா படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு என்பது அதற்கு ரஜினி சம்மதித்தார் என்பதும் என் வாழ்நாள் கடன், அதற்கு ரஜினி அவர்களுக்கு மிகப்பெரிய நன்றி. அதோடு மேடையில் நிற்பது, ரஜினி முன் நிற்க நடுக்கமாக இருக்கிறது என்றார். 

ரஜினி உங்களை படத்தில் தங்கச்சிலை என்று சொல்லியிருக்கிறாரே என்று தொகுப்பாளர் கேள்வி கேட்டதற்கு பதிலளித்த அவர், ரஜினி என்னை தங்கச்சிலை என சொன்னது வரம் என்றார். 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com