பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் காலா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
கபாலி படத்தினைத் தொடர்ந்து இயக்குனர் பா.இரஞ்சித்துடன் இரண்டாவது முறையாக ரஜினி இணையும் படத்தின் காலா படத்தின் பெயர் இன்று காலை அறிவிக்கப்பட்டது. ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷின் வுண்டர்பார் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. மும்பை டானாக ரஜினி நடிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ரத்தம் தோய்ந்த முகத்துடன் ரஜினி ஆவேசமாக இருப்பது போலவும், ஜீப் ஒன்றின் மீது நாயுடன் ரஜினி கால் மீது கால் போட்டு அமர்ந்திருப்பது போன்றும் இருவிதமான பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை தயாரிப்பாளர் தனுஷ் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டு முதல் 15 நிமிடங்களுக்குள்ளாக ட்விட்டரில் மட்டும் 4,700 லைக்குகளை அள்ளியது. 2,800 பேர் ரீ-ட்வீட்டும் செய்தனர்.