ரஜினியின் கபாலி வசூல் எவ்வளவு?

ரஜினியின் கபாலி வசூல் எவ்வளவு?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து ஜூலை மாதம் வெளியான, ‘கபாலி’ படம் ரசிகர்களின் மனதில் மட்டுமல்ல, வசூலிலும் சாதனைப் படைத்துள்ளது.

பா. இரஞ்சித் இயக்கத்தில், கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த படம், ‘கபாலி’. இந்தப் படம் வசூலில் புதிய சாதனை படைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் வசூலானத் தொகை பற்றி தயாரிப்பாளர் தரப்பில் சொல்லப்படவில்லை. இந்நிலையில் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம், கபாலி உட்பட பெரிய ஹீரோக்கள் நடித்த பல படங்கள், விநியோகஸ்தர்களுக்கு பெரும் நஷ்டத்தைக் கொடுத்ததாகச் சமீபத்தில் கூறியிருந்தார். இதற்குப் பதலளிக்கும் விதமாக, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ’கபாலி’ வசூலை வெளியிட்டுள்ளார். அதன்படி, சென்னையில் மட்டும், 11.42 கோடி ரூபாய் வசூலித்து சாதனைப் படைத்துள்ளதாக தாணு தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com