‘காற்றின் மொழி’ படப்பிடிப்புக்கு ஜோதிகா ரெடி

‘காற்றின் மொழி’ படப்பிடிப்புக்கு ஜோதிகா ரெடி

‘காற்றின் மொழி’ படப்பிடிப்புக்கு ஜோதிகா ரெடி
Published on

ஜோதிகாவின் ‘காற்றின் மொழி’ படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

‘நாச்சியார்’ படத்திற்கு பிறகு ஜோதிகா செம பிசியாகிவிட்டார். ஒரு பக்கம் மணிரத்னம் படத்தின் ‘செக்கச்சிவந்த வானம்’ படப்பிடிப்பில் மும்முரமாக இயங்கி வருகிறார். அதனை அடுத்து ராதா மோகன் இயக்க உள்ள ‘காற்றின் மொழி’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இந்தப் படம் ஹிந்தியில் வெளியான ‘தும்ஹரி சுலு’வின் ரீமேக்.

ஹிந்தியில் வித்யா பாலன் நடித்திருந்தக் கதாப்பாத்திரத்தை அப்படியே தமிழில் செய்ய இருந்தார் ஜோதிகா. மணிரத்னம் படத்தின் படப்பிடிப்பில் ஜோதிகா கலந்து கொண்டுள்ளதால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதில் தெளிவில்லாமல் இருந்தது. இந்நிலையில் ‘காற்றின் மொழி’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் 4ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து படத்தை அக்டோபரில் திரையிடவும் படக்குழு தீர்மானித்துள்ளது.

‘காற்றின் மொழி’ என்பது ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் 2007ல் வெளியான ‘மொழி’ பாடலின் வரிகள். அதையே தனது புதிய படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளார் இயக்குநர்.
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com