\
ஜிமிக்கி கம்மலுக்கு நடனம் ஆடும் ஜோதிகா

ஜிமிக்கி கம்மலுக்கு நடனம் ஆடும் ஜோதிகா

ஜிமிக்கி கம்மலுக்கு நடனம் ஆடும் ஜோதிகா
Published on: 

மலையாளத்தில் மிகவும் வைரலான  ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு ‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகாவும் லட்சுமி மஞ்சுவும் நடனம் ஆடும் வீடியோ இன்று வெளியாகியுள்ளது. 

கடந்த ஆண்டு இந்தியில் வெளியான ‘துமாரி சுலு’ என்ற படத்தை இயக்குநர் ராதாமோகன் தமிழில் ‘காற்றின் மொழி’ என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார். 

இதில், முன்னணி நடிகையாக ஜோதிகா நடித்துள்ளார். மேலும் விதார்த், லட்சுமி மஞ்சு, யோகி பாபு, மனோபாலா ஆகியோரும் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் சிம்பு நடித்துள்ளார். 

இப்படம் நவம்பர் 16 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதன் ட்ரெய்லர் காட்சி நான்கு நாட்களுக்கு முன்பு வெளியாகி மிகவும் பிரபலமாகியது. இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய ஜோதிகா, ரீமேக் படத்தில் நடிப்பது சவாலாகத்தான் இருக்கும் எனவும் இதன் ஒரிஜினல் படத்தை நான் பார்க்கவில்லை எனவும் தெரிவித்தார். 

இந்நிலையில், மலையாளத்தில் மிகவும் வைரலான ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு ‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகாவும் லட்சுமி மஞ்சுவும் நடனம் ஆடியுள்ளனர். இதுகுறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 

ஜோதிகா கடைசியாக மணிரத்னம் இயக்கிய ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com