\
ஜோதிர்மயி
ஜோதிர்மயிமுகநூல்

அடையாளமே தெரியாத தோற்றத்தில் ஜோதிர்மயி... ஆச்சர்யத்தில் ரசிகர்கள்! எந்த படத்திற்காக இந்த கெட்-அப்?

இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது, நடிகை ஜோதிர்மயி-யின் தோற்ற மாற்றம்... யார் இந்த ஜோதிர்மயி விரிவாகப் பார்க்கலாம்...!
Published on

இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது, நடிகை ஜோதிர்மயியின் தோற்ற மாற்றம்... யார் இந்த ஜோதிர்மயி விரிவாகப் பார்க்கலாம்...!

நடிகை ஜோதிர்மயி என்றால் தமிழில் பெரும்பாலானோருக்கு சட்டென தெரியாது. ஆனால், தலைநகரம் திவ்யா என்றால் நிச்சயம் தெரிந்துவிடும். தலைநகரம் படத்தில் நாய் சேகர் கெட்டப் போட்ட வடிவேலு காதலிக்கும் முறைப் பெண் இவர்தான். தலைநகரம் மட்டுமல்ல இயக்குநர் சரணின் இதயத் திருடன், விஜயகாந்தின் சபரி, ஜீவன் நடித்த நான் அவன் இல்லை, சிம்பு தேவனின் அறை எண் 302-இல் கடவுள் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

ஜோதிர்மயி - குஞ்சகோபோபன்
ஜோதிர்மயி - குஞ்சகோபோபன்

இவரின் புதிய கெட்டப், இணையத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வரும் இவர், அமல் நீரத் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான போகன்வில்லா படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை ஜோதிர்மயியும், நடிகர் குஞ்சகோபோபனும் இணைந்து தயாரித்துள்ளனர். இதில் வரும் பாடல் ஒன்றில் ஜோதிர்மயியின் தோற்ற மாற்றம் பலரையும் கவர்ந்துள்ளது.

ஜோதிர்மயி
தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு: இருவரும் ஆஜராகாததால் மீண்டும் விசாரணை ஒத்திவைப்பு

இறுக்கம் நிறைந்த முகத்துடன் அவர் ஆடும் அசத்தல் நடனம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. தோற்றத்தை விட திறமையே ரசிகர்களிடம் கவனம் பெறும் என்பதை ஜோதிர்மயி நினைவூட்டியிருப்பதாக இணையத்தில் உரையாடல்கள் எழுந்துள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com