தொடங்கியது ஜோதிகாவின் ’காற்றின் மொழி’!

தொடங்கியது ஜோதிகாவின் ’காற்றின் மொழி’!

தொடங்கியது ஜோதிகாவின் ’காற்றின் மொழி’!
Published on

ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் ’காற்றின் மொழி’ படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கியது.

ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்து சூப்பர் ஹிட்டான படம், ’மொழி’. இந்த படத்துக்கு பிறகு ஜோதிகாவுடன் ராதாமோகன் மீண்டும் இணையும் படத்துக்கு ’காற்றின் மொழி’ என்று டைட்டில் வைத்துள்ளனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னையில் இன்று தொடங்கியது. பாப்டா மீடியா ஒர்க்ஸ் சார்பாக ஜி.தனஞ்செயன் தயாரிக்கிறார். இது இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற துமாரி சுலு (Tumhari Sulu) படத்தின் ரீமேக்.

இதில் விதார்த், லட்சுமி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, குமரவேல், மோகன் ராமன் , உமா பத்மநாபன் உட்பட பலர் நடிக்கிறார்கள். இசை காஷீப். ஒளிப்பதிவு, மகேஷ் முத்துசாமி.  இந்தப் படத்தின் தொடக்கவிழா சென்னையில் இன்று நடந்தது. நடிகர் சிவகுமார், சூர்யா மற் றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். 

படப்பிடிப்பு, சென்னையில் தொடர்ந்து 50 நாட்கள் நடைபெறவுள்ளது. அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகிறது.
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com