\
செப்டம்பர் 15-ல் திரைக்கு வரும் ஜோதிகாவின் ‘மகளிர் மட்டும்’

செப்டம்பர் 15-ல் திரைக்கு வரும் ஜோதிகாவின் ‘மகளிர் மட்டும்’

செப்டம்பர் 15-ல் திரைக்கு வரும் ஜோதிகாவின் ‘மகளிர் மட்டும்’
Published on

ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘மகளிர் மட்டும்’ திரைப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

36 வயதினிலே மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஜோதிகா, கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதன்படி, பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா, சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்பிரியா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மகளிர் மட்டும்’.

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் ட்ரெய்லருக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஜூலை மாதம் படம் வெளியாகும் என முன்னர் கூறப்பட்ட நிலையில் செப்டம்பர் 15 ஆம் தேதி திரைக்கு வருவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் இப்படத்தை தயாரிக்கிறது. படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com