ஜி.வி.பிரகாஷ் கேரவனுக்கு வந்து வாழ்த்தினார்: ஜோதிகா நெகிழ்ச்சி

ஜி.வி.பிரகாஷ் கேரவனுக்கு வந்து வாழ்த்தினார்: ஜோதிகா நெகிழ்ச்சி

ஜி.வி.பிரகாஷ் கேரவனுக்கு வந்து வாழ்த்தினார்: ஜோதிகா நெகிழ்ச்சி
Published on

ஜி.வி.பிரகாஷ் எனது கேரவனுக்கு வந்து வாழ்த்தினார் என்று நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.

பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் ‘நாச்சியார்’. இதில் ஜோதிகா முதன்முறையாக பிரகாஷுடன் சேர்ந்து நடிக்கிறார். இளம் தலைமுறை நடிகரான ஜிவிபி உடன் சீனியர் நடிகை ஜோதிகா நடிக்க முன் வந்திருப்பதை பலரும் எதிர்பார்ப்புடன் கவனித்து வருகிறார்கள். 

இந்நிலையில் “எதையும் நேர்மறையாக எடுத்து கொள்கிற நடிகர். முதல் நாள் பூஜையில் சந்தித்தார். அடுத்து கேரவனுக்கு வந்து என்னை வாழ்த்தினார்.இது அவசியமே இல்லை. இந்தத் தலைமுறை நடிகர்களிடம் இந்தத் தன்மை குறைவு. ஜிவிபி முதிர்ச்சியான நடிகர். இந்தப் படம் அவருக்கு அடுத்த கட்டமா இருக்கும்” என்று ஜோதிகா தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com