\
ஜோதிகாவுடன் முதன்முறையாக விதார்த்

ஜோதிகாவுடன் முதன்முறையாக விதார்த்

ஜோதிகாவுடன் முதன்முறையாக விதார்த்
Published on

நடிகர் விதார்த் முதன்முறையாக நடிகை ஜோதிகாவுடன் இணைந்து நடிக்க உள்ளார்.

கடந்த ஆண்டு வெளியான ஹிந்தி திரைப்படம் ‘துமாரி சுலு’. இதில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடித்திருந்தார். அதில் அவர் ஏற்றிருந்த ரேடியோ ஜாக்கி வேடம் பரவலாக பேசப்பட்டது. மாநிலம் தாண்டி அந்தப் படத்திற்கு மரியாதை ஏற்படுத்தியது. இந்நிலையில் இப்படத்தை தமிழில் எடுக்க உள்ளதாக செய்தி வெளியானது. இப்போது அந்தப் படத்தை தமிழில் ராதா மோகன் ரீமேக் செய்ய உள்ளார். வித்யா பாலன் பாத்திரத்தில் ஜோதிகா நடிக்க உள்ளார். அந்தப் படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என ஒரு போட்டி நடத்தப்பட்டது. அதன்படி படத்திற்கு ‘காற்றின் மொழி’ என தலைப்பிட்டுள்ளது படக்குழு. இந்தப் படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து விதார்த் நடிக்க இருக்கிறார். மேலும் லஷ்மி மஞ்சுவும் நடிக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com