\
மணிரத்னம் படப்பிடிப்பில் ஜோதிகா

மணிரத்னம் படப்பிடிப்பில் ஜோதிகா

மணிரத்னம் படப்பிடிப்பில் ஜோதிகா
Published on: 

மணிரத்னம் படப்பிடிப்பில் நடிகை ஜோதிகா பங்கேற்றுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

‘நாச்சியார்’ படத்திற்கு பின் நடிகை ஜோதிகா நடித்து வரும் திரைப்படம் ‘செக்கச்சிவந்த வானம்’. மணிரத்னம் இயக்கும் இப்படத்தில் மல்டி ஸ்டார்ஸ் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தில் அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷின் காட்சிகள் முழுவதுமாக படமாக்கப்பட்டுவிட்டன. இந்தப் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து இவர்கள் இருவரும் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியை தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் நடிகை ஜோதிகா பங்கேற்றுள்ளார். அவரது காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அதில் ரயிலில் பயணிப்பதைபோல உள்ள காட்சியை படமாக்கும் புகைப்படங்கள் தற்சமயம் சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளன. மேலும், நடிகர் சிம்பு பெரிய மசூதி அருகில் நிற்பதைபோன்ற படமும் ட்விட்டரில் உலாவி வருகிறது. பொதுவாக ட்விட்டரில் வெளியாகும் இந்தப் படம் சம்பந்தமான புகைப்படங்கள் அனைத்தும் கறுப்பு வெள்ளையில் வெளியாகி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com