சினிமா
கண்பார்வையற்ற பெண்ணுக்கு வாய்ப்பு அளித்த ஜிவி..!
கண்பார்வையற்ற பெண்ணுக்கு வாய்ப்பு அளித்த ஜிவி..!
கண்பார்வையற்ற பெண்ணுக்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர் இசையமைக்கும் படத்தில் பாட வாய்ப்பு அளித்துள்ளார்.
திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் ஜொலித்து கொண்டிருக்கும் ஜிவி பிரகாஷ் கண் பார்வையற்ற ஜோதி என்ற பெண்ணுக்கு அவர் இசையமைக்கும் படத்தில் பாட வாய்ப்பு கொடுத்துள்ளார். அண்மையில் ஜோதி பாடிய கண்ணமா கண்ணமா என்ற திரைப்பட பாடல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இணையத்தில் பரவிய ஜோதியின் பாடலை கேட்டு பாராட்டியுள்ள ஜீவி அந்த பெண்ணுக்கு தான் இசையமைக்கும் அடங்கதே படத்தில் ஒரு பாடலை பாட வாய்ப்பும் கொடுத்துள்ளார்.