காதலர் தினத்திற்கு விஷ்ணு விஷால் கொடுத்த சர்ப்ரைஸ்..!

காதலர் தினத்திற்கு விஷ்ணு விஷால் கொடுத்த சர்ப்ரைஸ்..!

காதலர் தினத்திற்கு விஷ்ணு விஷால் கொடுத்த சர்ப்ரைஸ்..!
Published on

காதலர் தின அறிவிப்பாக நடிகர் விஷ்ணு விஷால் தனது காதலியின் புகைப்படத்தை  ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

கடந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக திருமண வாழ்வில் இருந்து விவாகரத்து பெற்றுவிட்டதாக அறிவித்தார் நடிகர் விஷ்ணு விஷால். அதனை அடுத்து அவரது மனைவி ரஜினியும் இவரும் சட்டப்படி பிரிந்தனர். அதன்பின் அவர் சில மாதங்களாக மெளனமாக இருந்து வந்தார். ஆனால் கடந்த மாதம் திடீரென்று அவர் ட்விட்டரில் பகிர்ந்து கொண்ட செய்தி, பகீர் ரகமாக இருந்தது. தான் கடந்த சில காலமாக மன உளைச்சலில் இருந்ததாகவும் அதனையொட்டி குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டதாகவும் ஆனால் இப்போது அதில் இருந்து ‘வாரணம் ஆயிரம்’ பாணியில் மீண்டு வந்துவிட்டதாகவும் கூறியிருந்தார். இந்தச் செய்தியுடன் அவர் தன் உடலை எவ்வாறு வலுப்படுத்தி மீட்டுக் கொண்டு வந்துள்ளேன் என்பதை குறிக்கும் பொருட்டு சில படங்களை வெளியிட்டிருந்தார். அந்தச் செய்தி வைரலாக மாறியது.

இந்நிலையில் விஷ்ணு விஷால் உடன் காதலில் விழுந்துள்ளதாக அதிகாரப்பூர்வமான ஒரு அறிவிப்பை ட்விட்டரில் ஜ்வாலா குட்டா தெரிவித்துள்ளார். மேலும் விஷ்ணு விஷாலுடன் ‘காதலர் தின’த்தை கொண்டாடிய புகைப்படத்தையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை விஷ்ணுவுக்கு டேக் செய்துள்ளார். அதற்கு ஒரு அமைதியைக் குறிக்கும் பொம்மையைப் போட்டு உள்ளார் விஷ்ணு விஷால். ஜ்வாலா குட்டா ஒரு பேட்மிண்டன் விளையாட்டு வீரர்.

இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால், அதற்கு இவர்கள் தரப்பில் இருந்து எந்த மறுப்பும் வெளியாகவில்லை. ஆனால் நேற்று காதலர் தினம் என்பதால் இருவரும் இதனைக் கூட்டாக அறிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com