\
மிக நீளமான படமாக உருவாகியுள்ள ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன்!

மிக நீளமான படமாக உருவாகியுள்ள ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன்!

மிக நீளமான படமாக உருவாகியுள்ள ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன்!
Published on

'ஜுராசிக் பார்க்' படங்களிலேயே நீளமான படமாக 'ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன்' திரைப்படம் உருவாகியுள்ளது.

இயக்குநர் கோலின் ட்ரெவொரோ இயக்கத்தில் வெளியாகவுள்ள இந்த திரைப்படம், வரும் ஜூன் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. ஒட்டுமொத்த ஜுராசிக் பார்க் தொடரின் ஆறாவது திரைப்படம் இது. ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன் திரைப்படத்தில், முந்தைய படங்களில் தோன்றிய நடிகர்களில் 10 பேர் தங்கள் கதாபாத்திரங்களை மீண்டும் ஏற்று நடித்துள்ளனர்.

குறிப்பாக, முதல் ஜுராசிக் பார்க் படத்தில் நடித்த சாம் நெய்ல், லாரா டெர்ன், ஜெஃப் கோல்ட்பிளம் ஆகிய மூன்று நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருப்பது, ரசிகர்களை மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அண்மையில், இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஜுராசிக் பார்க் படங்களிலேயே நீளமான படமாக, 2 மணி நேரம் 26 நிமிடம் ஓடும் வகையில் இந்த திரைப்படம் தயாராகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com