\
ஜூங்கா டீம் நவம்பர் 4 ல் இந்தியா திரும்புகிறது

ஜூங்கா டீம் நவம்பர் 4 ல் இந்தியா திரும்புகிறது

ஜூங்கா டீம் நவம்பர் 4 ல் இந்தியா திரும்புகிறது
Published on

ஜூங்கா டீம் பாரீசில் வெளிநாட்டு படப்பிடிப்புகளை முடித்துக் கொண்டு நவம்பர் 4 அன்று இந்தியா திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்சேதுபதி நடிக்கும் ஜூங்கா படத்தின் படப்பிடிப்புகள் பாரீசில் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தை கோகுல் இயக்குகிறார். பாரீஸ் படப்பிடிப்பு முடிந்த உடன் இப்படக் குழு பல்கேரியா மற்றும் ஆஸ்திரியாவிற்கு சென்று அங்கு சில பாடல்களின் படப்பிடிப்பை மேற்கொள்ள இருக்கிறது. இந்தப் பாடல்களை டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தரம் வடிவமைக்க இருக்கிறார். இங்கு மொத்தம் மூன்று பாடல்களை எடுக்க உள்ளனர். இந்த வேலைகள் முடிந்த உடன் நவம்பர் 4ம் தேதி அன்று மொத்த குழுவும் இந்தியா திரும்ப உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com