உலகின் மிகவும் அழகானப் பெண்ணாக ஹாலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புகழ் பெற்ற பீபிள் பத்திரிகை ஒவ்வொரு வருடமும் உலகின் மிகவும் அழகானப் பெண்ணை ஆன்லைன் மூலம் தேர்வு செய்கிறது. ரசிகர்கள் அளிக்கும் வாக்கின் படி இவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த வருடமும் அப்படியொரு தேர்வை நடத்தியது அந்த பத்திரிகை. இதில் நடிகை ஜூலியா ராபர்ஸ் உலகின் மிகவும் அழகானப் பெண்ணாகத் தேர்வாகியுள்ளார். அந்த பத்திரிகையின் அட்டையில் அவர் இடம்பிடித்துள்ளார்.
இதே பத்திரிகை அவரை ஐந்தாவது முறையாக இப்போது தேர்ந்தெடுத்திருக்கிறது. இதற்கு முன், 1991, 2000, 2005, 2010 ஆகிய ஆண்டுகளில் ஜூலியா தேர்வாகியிருந்தார். இப்போது இவரது வயது, ஜஸ்ட் 49 தான்.

