விக்னேஷ் சிவன் – நயன்தாரா தயாரிப்பில் ஹீரோயினாகும் ஜோனிடா காந்தி!

விக்னேஷ் சிவன் – நயன்தாரா தயாரிப்பில் ஹீரோயினாகும் ஜோனிடா காந்தி!

விக்னேஷ் சிவன் – நயன்தாரா தயாரிப்பில் ஹீரோயினாகும் ஜோனிடா காந்தி!
Published on

நயன்தாரா - விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் பாடகி ஜோனிடா காந்தியும் ‘சூரரைப் போற்று’ கிருஷ்ணகுமாரும் ஹீரோ ஹீரோயினாக நடிக்கவுள்ளார்கள்.

நயன்தாரா - விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் தற்போது ‘நெற்றிக்கண்’, ’கூழாங்கல்’ உள்ளிட்டப் படங்களை தயாரித்துள்ளது. அருண் மாதேஸ்வரனின் ‘ராக்கி’ படத்தின் வெளியீட்டு உரிமையையும் பெற்றுள்ளது. இந்நிலையில், ’வாக்கிங்/டாக்கிங் ஸ்டராபெர்ரி ஐஸ்கிரீம்’ என்ற புதிய படத்தை தயாரிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் விக்னேஷ் சிவன். இப்படத்தினை, விக்னேஷ் சிவனின் உதவி இயக்குநர் வினாயக் இயக்கவுள்ளார்.

’மென்டல் மனதில்’, ’இறைவா’, ’ஓஎம்ஜி பொண்ணு’, ‘மெய் நிகரா’ உள்ளிட்ட பல்வேறு பாடல்களை படங்களிலும், இசையமைப்பாளர் அனிருத்துடன் பல ஆல்பங்களிலும் பாடிய ஜோனிடா காந்தி சமீபத்தில் ‘டாக்டர்’ படத்தில் பாடிய ’செல்லம்மா’ பாடல் தமிழகம் முழுக்க வைரல் ஹிட் அடித்தது. அதோடு, கடந்த வாரம் யுவன் ஷங்கராஜாவின் ஆல்பம் பாடலான ஆல்பம் பாடலான ‘டாப் டக்கர்’ பாடலையும் ஜோனிடா காந்திதான் பாடியுள்ளார். 

வெளியான ஒரு வாரத்திலேயே இப்பாடல் 1 மில்லியன் லைக்ஸ்களுக்கு மேல் லைக்ஸ்களைக் குவித்து சாதனை செய்துள்ளது. அனிருத்தின் தோழியான ஜோனிடா காந்தி ஹீரோயினாக நடிப்பதால் எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன,

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com