’பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்: ஜாக் ஸ்பாரோ கேரக்டருக்கு ஜானி டெப் டாட்டா!

’பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்: ஜாக் ஸ்பாரோ கேரக்டருக்கு ஜானி டெப் டாட்டா!
’பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்: ஜாக் ஸ்பாரோ கேரக்டருக்கு ஜானி டெப் டாட்டா!

’பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ படத்தின் அடுத்த பாகத்தில் இருந்து பிரபல ஹீரோ ஜானி டெப் விலகியுள்ளார்.

 டெட் மேன், ஸ்லீப்பி ஹாலோவ், பிரம் ஹெல், சீக்ரெட் விண்டோ உட்பட பல படங்களில் நடித்த ஜானி டெப் , 2003 ஆம் ஆண்டு, ’பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்: த கர்ஸ் ஆப் த பிளாக் பேர்ல்’ என்ற படத்தில் நடித்தார். இதையடுத்து, தொடர்ந்து ’பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ படங்களின் அடுத்தடுத்த பாகங்களில் நடிக்கத் தொடங்கினார். இந்த பாகங்கள் அவருக்கு பிரபலமான இடத்தை அவருக்கு அளித்தது.

அந்த படத்தில் இடம்பெறும் கேப்டன் ஜாக் ஸ்பாரோ கேரக்டரில் சிறப்பாக நடித்திருப்பார் ஜானி டெப். அந்த கேரக்டர் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாக செய்யும் நக்கல் பேச்சு, செல்லச் சேட்டைகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ஜாக் ஸ்பாரோ என்றாலே அது ஜானி டெப்தான் என்ற நிலை உருவானது.  கடந்த 15 வருடங்களாக அந்த கேரக்டரில் நடித்து வந்த, 55 வயதான ஜானியை இனி அந்த கேரக்டரில் பார்க்க முடியாது.

இந்த படத்தின் பாகங்களைத் தயாரித்து வரும் டிஸ்னி ஸ்டூடியோ, இனி மாற்றங்களுடன் புதிய அமைப்பில் பைட்ரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் பட பாகங்களை வெளியிட முடிவு செய்துள்ளது. இதனால் ஜானி டெப் அடுத்த பாகங்களில் தொடர மாட்டார். இதை அந்த படத்தின் ஸ்கிரிப்ட் டைரட்டர் ஸ்டூவர்ட் பீட்டீ தெரிவித்துள்ளார். 

‘இந்த கேரக்டரின் மூலம் ஜானி பெரும் புகழ் அடைந்துவிட்டார். ஸ்பாரோ என்றாலே அது ஜானிதான் என்ற நிலையையும் உருவாக்கி விட்டார். உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் இந்த கேரக்டரின் மூலம் அவரை விரும்புகிறார்கள்.

இது அவருக்கும் எங்களுக்கும் மகிழ்ச்சியானது. இந்த கேரக்டர் அவரது சொத்து. அவர் இந்த கேரக்டர் மூலம் எப்போதும் நினைக்கப்படுவார்’ என்றார். 

அவருக்கு பதிலாக அடுத்த ஜாக் ஸ்பாரோ யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com