\
“ஆட்டம்னா இப்படி இருக்கணும்”-பயிற்சி வீடியோ வெளியிட்ட ஜான் கோக்கேன்

“ஆட்டம்னா இப்படி இருக்கணும்”-பயிற்சி வீடியோ வெளியிட்ட ஜான் கோக்கேன்

“ஆட்டம்னா இப்படி இருக்கணும்”-பயிற்சி வீடியோ வெளியிட்ட ஜான் கோக்கேன்
Published on

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி மற்றும் காலா படங்களை இயக்கிய பா. ரஞ்சித், அடுத்து ஆர்யாவை ஹீரோவாக வைத்து, ‘சல்பேட்டா’ என்ற படத்தை இயக்கவுள்ளார். அரசியல் - விளையாட்டுக் கதையான இந்த படத்தில் 80களின் மெட்ராஸைச் சேர்ந்த பாக்ஸராக ஆர்யா வருகிறார் எனச் சொல்லப்படுகிறது. அதற்காக கடுமையான பயிற்சியும் செய்துகொண்டிருக்கிறார்.

இந்த படத்தில் வில்லனாக வருகிறார் பல தெலுங்கு படங்களில் பிரபலமான ஜான் கோக்கேன். இவரும் பாக்ஸராக வருவதால் அதற்கு தன்னை கடுமையாக தயார் செய்துகொண்டிருக்கிறார். தற்போது அவர் பாக்ஸிங் பயிற்சியும் எடுத்துக்கொள்கிறார். அவர் பயிற்சி பெறும் வீடியோக்களை தனது ட்விட்டர்  மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டுள்ளார். ’’ஊரடங்கு முடியும் தருவாயில் தொடங்கவுள்ள தமிழ்ப்படத்திற்காக பயிற்சிபெற்று வருகிறேன்’’ எனக் குறிப்பிட்டு, சல்பேட்டா மற்றும் ஆர்யாவை டேக் செய்துள்ளார்.

’போதை ஏறி புத்தி மாறி’ படத்தில் அறிமுகமான துஷாரா விஜயன், இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ’அட்டகத்தி’ தினேஷ் மற்றும் கலையரசன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ‘கதை திரைக்கதை வசனம்’ படத்தில் நடித்திருந்த சந்தோஷ் பிரதாப் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கே9 ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயண் இசையமைக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com