"ஜிமிக்கி கம்மல்" பாடலின் மூலம் பிரபலமான ஷெரிலுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
கேரளாவில் லால் ஜோஸ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளிவந்த திரைப்படம் "வெளிப்பாடிண்டே புஸ்தகம்". இந்தப் படத்தில் ஷான் ரஹ்மான் மியூசிக்கில் இடம்பெற்ற "எண்டமடே ஜிமிக்கி கம்மல்" என்ற பாடளுக்கு நடனமாடி இணையத்தில் பதிவேற்றும் செய்யும் நபருக்கு சன்மானம் வழங்கப்படும் என படக்குழு அறிவித்தது. அதன்படி கேரளாவைச் சேர்ந்த தங்களது திறமைகளை காட்டி ஜிம்மிக்க கமல் பாடலின் நடன வீடியோக்களை பகிர்ந்து வந்தனர். அதில் ஒரு வீடியோ கேரளாவையும் தாண்டி தமிழகத்திலும் பிரபலம் ஆனது,அந்த வீடியோவில் நடனம் ஆடிய ஷெரில் என்பவர் மாநில எல்லைகளை தாண்டி பிரபலம் ஆனார். பல இளைஞர்களின் கனவுக் கன்னியாகியாகவே மாறினார் ஷெரில். இதில் உச்சபட்சமாக மணிரத்னம் இயக்கப்போகும் படத்திலும் ஷெரில் நடிக்கப்போவதாக கூட தகவல் வெளியானது.
கேரளாவை விட தமிழக இளைஞர்களின் நாடித்துடிப்பானார் ஷெரில். இப்போது ஷெரிலுக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டது என்ற செய்தி இளைஞர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம், ஷெரிலே தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பிரபுஃல் டோமி என்பவருடன் நிச்சயமாகிவிட்டதாக தகவலை பதிவிட்டுள்ளார்.