\
‘கொரிலா’உடன் ஷூட்டிங் முடித்த ஜீவா

‘கொரிலா’உடன் ஷூட்டிங் முடித்த ஜீவா

‘கொரிலா’உடன் ஷூட்டிங் முடித்த ஜீவா
Published on

நடிகர் ஜீவா ‘கொரிலா’உடன் சேர்ந்து நடித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நடிகர் ஜீவா மற்றும்‘அர்ஜுன் ரெட்டி’ஷாலினி பாண்டே இணைந்து நடித்து வரும் திரைப்படம் ‘கொரிலா’ இந்தப் படத்தின் இரண்டாவது ஷெட்யூல் தாய்லாந்து நாட்டில் படமாகி வந்தது. இதற்காக வரும் பிப்ரவரி மாதம் 17ம் தேதி கொரிலா படக்குழு தாய்லாந்து சென்றது. இந்தப் படப்பிடிப்பு என்பது மார்ச் 10 ஆம் தேதிவரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதன் வேலைகள் தற்போதுதான் முடிவடைந்துள்ளன.
இது குறித்து நடிகர் ஜீவா தனது ட்விட்டர் பக்கத்தில் கொரிலா உடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், “இந்தப் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நிறைவடைந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com