ஜெயம் ரவியுடன் சேர்ந்து அவரது மகன் நடிக்க வருகிறார்.
ஜெயம் ரவி நடிக்கும் படம் டிக்..டிக்..டிக்.. இந்தப் படத்தை சக்தி செளதர்ராஜன் இயக்கி வருகிறார். இவர் ஏற்கெனவே ரவியை வைத்து மிருதன் படத்தை இயக்கியவர். இருவரும் இந்தக் கூட்டணி மூலம் மறுபடியும் இணைகிறார்கள். இப்படத்தின் கதைக்கரு விண்வெளியை மையமாகக் எடுக்கப்பட்டு வருகிறது. இது ஒரு த்ரில்லர் படம். இதில் ஒரு முக்கியமான குழந்தை கதாபாத்திரம் தேவைபட்டுள்ளது. பலரிடம் பேசி பார்த்திருக்கிறார்கள். புதியதாக ஒரு குழந்தையை தேடிப்பிடித்து நடிக்க வைப்பதைவிட அப்பாவுடன் மகனையே நடிக்க வைத்தால் இயல்பாக இருக்குமே என முடிவெடுத்துள்ளது படக்குழு. ஆனால் இதற்கு முதலில் ரவி சம்மதிக்கவில்லை. அவனது படிப்பு கெட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்துள்ளார். அவரது மகன் ஆரவ் படிப்பில் படு சுட்டி. யார் தயவும் இல்லாமலே எல்கேஜி வகுப்பில் முதல் மாணவனாக தேறியவன். எப்படியோ விஷயத்தை விளக்கிச் சொல்லி வீட்டில் சம்மதம் வாங்கியுள்ளார் இயக்குநர்.
ஆரவ்வின் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டன. விரைவில் தன் அப்பாவுடன் சேர்ந்து திரைக்கு ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க இருக்கிறான் இந்தச் சுட்டி பையன்.