\
‘கொரில்லா ’ செட்டில்  ஜீவா எடுத்த செல்ஃபி

‘கொரில்லா ’ செட்டில் ஜீவா எடுத்த செல்ஃபி

‘கொரில்லா ’ செட்டில் ஜீவா எடுத்த செல்ஃபி
Published on

ஆல் இன் பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரித்து வரும் திரைப்படம்‘கொரில்லா ’.இப்படத்தில் ஜீவா, சதீஷ், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, ராதாரவி, ஷாலினி பாண்டே மற்றும் பலர் நடிக்கிறனர். 

படத்தைப் பற்றி தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திரா,“இந்தியாவில் முதன்முதலாக சிம்பன்சி குரங்குடன் நடிகர்கள் இணைந்து நடிக்கும் இந்தக் கொரில்லா படத்தின் முதற்கட்ட படபிடிப்பு அண்மையில் தாய்லாந்து நாட்டில் நடைபெற்று முடிவடைந்தது. இதன் இறுதி கட்ட படபிடிப்பிற்காக நூற்றுக்கணக்கான திரைப்பட தொழிலாளர்களின் உழைப்பில் சென்னையின் புறநகரில் பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. அங்கு கடும் கோடையையும் பொருட்படுத்தாமல் நடிகர்கள் ஜீவா, சதீஷ், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு மற்றும்  ராதாரவி ஆகியோருடன் ஆயிரம் துணை நடிகர், நடிகைகள் பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்தப் படபிடிப்பு நடைபெற்று முடிந்தவுடன் ‘கொரில்லா ’ படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியிடப்படும்.”என்றார்.

இந்நிலையில் படப்பிடிப்பின் போது நடிகர் ஜீவா, தன் சக நடிகர்களான சதீஷ், மொட்டை ராஜேந்திரன் உடன் எடுத்து கொண்ட செல்ஃபி புகைப்படம் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com