\
மியூசியத்திற்கு செல்கிறது ரஜினியின் ‘காலா’ஜீப்!

மியூசியத்திற்கு செல்கிறது ரஜினியின் ‘காலா’ஜீப்!

மியூசியத்திற்கு செல்கிறது ரஜினியின் ‘காலா’ஜீப்!
Published on

’காலா’படப்பிடிப்பிற்காக பயன்படுத்தப்படும் ஜீப்பை மஹிந்திரா நிறுவனத்தின் மியூசியத்திற்கு அளிப்பதாக நடிகர் தனுஷ் ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

’காலா’ போஸ்டரில் ரஜினி அமர்ந்துள்ள ஜீப்பை, மஹிந்திரா நிறுவனத்தின் மியூசியத்தில் வைக்க விரும்புவதாக மகேந்திரா நிறுவனத்தின் செயல் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும், நடிகர் ரஜினிகாந்த் பயன்படுத்துவதால் அந்த ஜீப் சாதனைக் கருவிதான் என்றும் அவர் பதிவிட்டிருந்தார். 

மஹிந்திரா நிறுவனரின் ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள ’வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’நிறுவனத்தின் தலைவரான நடிகர் தனுஷ், “தற்போது ஷூட்டிங்கிற்காக பயன்படுத்தப்படும் ஜீப், படப்பிடிப்பு முடிந்ததும் உங்களை வந்து சேரும். மிக்க நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com