ஜெயம் ரவியின் 25 வது படமான ’பூமி’  ஓடிடியில் வெளியீடு?

ஜெயம் ரவியின் 25 வது படமான ’பூமி’ ஓடிடியில் வெளியீடு?

ஜெயம் ரவியின் 25 வது படமான ’பூமி’ ஓடிடியில் வெளியீடு?
Published on

இயக்குநர் லக்‌ஷ்மண் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள ‘பூமி’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

ரோமியோ ஜூலியட், போகன் படங்களைத் தொடர்ந்து லக்‌ஷ்மண் – ஜெயம்ரவி கூட்டணி மூன்றாவதாக இணைந்துள்ள படம் பூமி. இப்படத்தில், ஜெயம் ரவி நாசா விஞ்ஞானியாகவும் விவசாயியாகவும் நடித்திருக்கிறார்.

இவருக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். ஜெயம் ரவியின் 25 வது படமாக பூமி வெளியாகவிருப்பதால், இக்கூட்டணியின் ஹாட்ரிக் வெற்றியை தமிழ் திரையுலகம் எதிர்பார்த்து வருகிறது.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்றால் திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில், பூமி படத்தின் வெளியீடு ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, அடுத்தமாதம் விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கமும், சூர்யாவின் சூரரைப் போற்று படமும் வெளியாகவுள்ளது.

தற்போது, தமிழின் முன்னணி நடிகரான ஜெயம் ரவியின் படமும் வெளியாகவிருப்பதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். கடந்த வருடம் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான  ’கோமாளி’ பெண் கிடைக்காத 90 கிட்ஸ்களின் வேதனையை பதிவு செய்து வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் முதல் தமிழ் படம் பூமி என்பது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com