சினிமா
“இனி என் படங்களில் சமூக கருத்துக்கள் இருக்கும்” - ஜெயம் ரவி
“இனி என் படங்களில் சமூக கருத்துக்கள் இருக்கும்” - ஜெயம் ரவி
தனக்கு நூறு சதவீத சமூகப் பொறுப்பு இருக்கிறது என்று ‘கோமாளி’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் ஜெயம் ரவி பேசியுள்ளார்.
சினிமா போன்ற மாஸ் மீடியாவில் இருப்பது தனக்கு பலம் என்றும், திரைப்படங்கள் மூலமாக சமூக கருத்துக்களை கமர்ஷியல் கலந்து கூறுகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இனி தான் நடிக்கும் திரைப்படங்களிலும் சமூக கருத்துக்களை பயன்படுத்துவேன் என்று கூறிய ஜெயம்ரவி, தற்போது நடித்துள்ள ‘கோமாளி’ திரைப்படத்திலும் ஒரு சமூக கருத்தை கூறியுள்ளதாக தெரிவித்தார்.