\
லக்‌ஷ்மன் இயக்கத்தில் விவசாயி ஆகிறார் ஜெயம் ரவி

லக்‌ஷ்மன் இயக்கத்தில் விவசாயி ஆகிறார் ஜெயம் ரவி

லக்‌ஷ்மன் இயக்கத்தில் விவசாயி ஆகிறார் ஜெயம் ரவி
Published on: 

லக்‌ஷ்மன் இயக்கும் படத்தில் ஜெயம் ரவி, விவசாயி ஆக நடிக்கிறார்.

ஜெயம் ரவியின் 25-வது படம் பற்றிய அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது. இதை ஜெயம் ரவி நடித்த ’போகன்’, ’ரோமியோ ஜூலியட்’ ஆகிய படங்களை இயக்கிய லக்‌ஷ்மன் இயக்குகிறார். இந்தப் படம் மூலம் மூன்றாவது முறையாக இருவரும் இணைகின்றனர்.

ஜெயம் ரவி ஜோடியாக, நடிக்க முன்னணி ஹீரோயினிடம் பேசி வருகின்றனர். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. இமான் இசையமைக்கிறார். 

படம் பற்றி இயக்குனர் லக்‌ஷ்மன் கூறும்போது, ‘’இது எல்லோருக்கும் தெரிந்த கதை. ஆனால், சினிமாவில் சொல்லப்படாத கதை. ஜெயம் ரவி இரண்டு கெட்டப்பில் வருகிறார். ஒன்று விவசாயி கேரக்டர். படத்தில் அரசியலும் இருக்கிறது. ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜய குமார் தயாரிக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி நான் இயக்குகிறேன். படப்பிடிப்பு ஜூன் மாதம் 15 ஆம் தேதி தொடங்குகிறது. இது கண்டிப்பாக பேசப்படும் படமாக இருக்கும்’’ என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com