\
மீண்டும் அண்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி

மீண்டும் அண்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி

மீண்டும் அண்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி
Published on

மறுபடியும் அண்ணன் ஜெயம் ராஜா இயக்கத்தில் அவரது தம்பி ஜெயம் ரவி நடிக்க இருக்கிறார்.

சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியான ’வேலைக்காரன் ’திரைப்படத்தை ஜெயம் ராஜா இயக்கி இருந்தார். அந்தப் படம் கருத்தியியல் ரீதியாக சிவகார்த்திகேயனுக்கு வேறு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. ஆனால் ‘தனி ஒருவன்’போல பெரும் வெற்றியை அடையவில்லை. இந்நிலையில் மீண்டும் அண்ணனின் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க இருக்கிறார். சமூக பிரச்னையை மையமாக வைத்து இதன் திரைக்கதை உருவாக இருப்பதாக தெரிகிறது. இந்தப் படம் ரவிக்கு 25 ஆவது திரைப்படமாகும். பொதுவாக அண்ணன் இயக்கத்தில் ரவி நடித்த அனைத்து படங்களுமே நல்ல வெற்றியை அடைந்துள்ளன. இந்த ராசியான கூட்டணி மறுபடியும் இணைய இருப்பது அவர்களது ரசிகர்கள் இடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com