''ஜெயலலிதாவைப்போல நான் அவ்வளவு அழகான நடிகை இல்லை'' - கங்கனா ரனாவத்

''ஜெயலலிதாவைப்போல நான் அவ்வளவு அழகான நடிகை இல்லை'' - கங்கனா ரனாவத்

''ஜெயலலிதாவைப்போல நான் அவ்வளவு அழகான நடிகை இல்லை'' - கங்கனா ரனாவத்
Published on

‘தலைவி’ படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடித்துவரும் கங்கனா, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பேசியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016-ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவரது வாழ்க்கை வரலாற்றை இன்று பலரும் படமாக எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இயக்குநர் விஜய், ‘தலைவி’ என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து வருகிறார். இந்தத் திரைப்படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ஜெயலலிதாவாக நடித்து வருகிறார். எம்ஜிஆர் வேடத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடித்து வருகிறார். எம்ஜிஆர் பிறந்த நாளின்போது வெளியான அரவிந்த் சாமியின் லுக் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ஜெயலலிதா வேடத்தில் நடித்துவரும் கங்கனா, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பேசியுள்ளார். அதில், ''ஜெயலலிதா என்னைப்போல இல்லை. அவர் அழகான, கவர்ச்சியான நடிகை. பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயைபோல என்று சொல்லலாம். அதனால்தான் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுக்குள் நான் பொருந்துவது பெரிய சவாலாக இருந்தது. ஏனென்றால் நான் அவ்வளவு அழகான நடிகை இல்லை. எங்களுக்குள்ளான ஒற்றுமை என்றால், நாங்கள் இருவருமே நடிப்புத் துறைக்குள் வர தயக்கம் காட்டியுள்ளோம். அதனால்தான் நாங்கள் வழக்கமான நடிகராக இல்லை.

ஒரு நடிகை என்பதையும் தாண்டி அவரை அவர் நம்பினார். அதனால்தான் அரசியலில் சாதித்தார். அதேபோல் நானும் நடிகை என்பதோடு நின்றுவிடாமல் சினிமா இயக்கவும் செய்கிறேன். எல்லா பெண்களை போலவும் அவர் குடும்பத்திற்காக ஏங்கினார். குழந்தைக்காக ஏங்கினார். நானும் அப்படி குடும்பத்திற்காக ஏங்கி இருக்கிறேன். திருமணமான சில நடிகர்கள் அதனை பயன்படுத்திக் கொண்டனர். படத்திலும் ஒரு திருமணமான நடிகர் திருமண ஆசை காட்டுகிறார். பின்னர் அவரது வார்த்தையை திரும்பப் பெறுகிறார்'' என தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com