சர்ச் பார்க் பள்ளியில் நடந்த கலை விழாவில் பங்கேற்ற நடிகர் விஷால், அந்தப் பள்ளியில் மிகப்பெரிய லெஜெண்ட்டுகள் படித்து வந்துள்ளதாகவும், அவர்களில் ஒருவர் ஜெயலலிதா மற்றொருவர் த்ரிஷா என்றும் கூறினார்.
இந்தாண்டுக்கான கலை விழா சர்ச் பார் பள்ளியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட விஷால், வெறும் புத்தக படிப்பு மட்டும் நமக்கு நல்ல பலனை தராது. இதை போன்ற கலாச்சார விழாக்களில் பங்கேற்கும் போது உங்களுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும். அந்த அனுபவம் உங்களுக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய உதவியாக இருக்கும். நான் பள்ளியில் படிக்கும்போது பல மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன். அதை போல் கிடைக்கும் ஒரு மேடையை கூட நீங்கள் தவறவிடாமல் அனைத்து மேடையிலும் பங்கேற்க வேண்டும். அப்படி நான் அனைத்து மேடையிலும் பங்கேற்றதுதான் எனக்கு இன்று மிகப்பெரிய உந்துதலாக அமைந்தது.
உங்கள் அனைவருக்கும் மிக சிறந்த ஆசிரியர்கள் கிடைத்துள்ளார்கள். அவர்கள் கண்டிப்பாக உங்களை இந்த நாட்டின் சிறந்த குடிமகனாக உருவாக்குவார்கள். வெளியே இருக்கும் நாங்கள் உங்களை போன்ற மாணவர்கள் இந்த சமூகத்துக்கு என்ன செய்ய போகிறீர்கள்? என்று காத்திருக்கிறோம் என்றார்.
மேலும் இந்தப் பள்ளியில் மிகப்பெரிய லெஜன்ட்கள் படித்து வந்துள்ளார்கள். அதில் ஒருவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றொருவர் என்னுடைய நெருங்கிய நண்பர் த்ரிஷா என்றார்.