தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' படத்திற்கு நடனம் அமைக்கும் ஜானி மாஸ்டர்
தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடன இயக்குநராக பணியாற்றும் ஜானி மாஸ்டர் தனுஷுடன் இருக்கும் புதிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
கார்த்திக் நரேனின் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ், மித்ரன் ஜவகர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்து வருகிறார். தனுஷுடன் ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களில் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இந்த நிலையில் முன்னணி நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடனம் அமைக்கிறார். பாடல் காட்சியின்போது தனுஷுடன் இருக்கும் புகைப்படத்தை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
விஜய்யின் 'பீஸ்ட்', ஷங்கரின் 'ராம்சரண் 15' படங்களிலும் பணியாற்றிவரும் ஜானி மாஸ்டர், ஏற்கனவே சூப்பர் ஹிட் அடித்த தனுஷின் 'ரெளடி பேபி' பாடல், அல்லு அர்ஜுனின் 'புட்ட பொம்மா' பாடல்களுக்கு நடனம் அமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.