\
மலையாள சூப்பர் ஹிட்டான ஹெலன் படத்தின் இந்தி ரீமேக்கில் ஜான்வி கபூர்?

மலையாள சூப்பர் ஹிட்டான ஹெலன் படத்தின் இந்தி ரீமேக்கில் ஜான்வி கபூர்?

மலையாள சூப்பர் ஹிட்டான ஹெலன் படத்தின் இந்தி ரீமேக்கில் ஜான்வி கபூர்?
Published on

மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஹெலன் திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மதுக்குட்டி சேவியர் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் ஹெலன். வினித் ஸ்ரீநிவாசன் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படத்தில் அன்னா பென், அஜு வர்கீஸ் உட்பட பலர் நடித்திருந்தனர். வணிக வளாகத்தில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றும் நாயகி ஒருநாள் இரவு காணாமல் போவதும், அவரை தேடிக் கண்டுபிடிப்பதும் என சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவான ஹெலன் திரைப்படம் மலையாளத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ரீமேக்கை மற்ற மொழிகள் போட்டி போட்டு கைப்பற்றியுள்ளன. இதில் இந்த திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மலையாளத்தில் அன்னா பென் நடித்த கதாபாத்திரத்தில் ஜான்வி நடிக்கவுள்ளதாகவும் மற்ற நடிகர்கள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த வருடம் இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

ஹெலன் படத்தின் தமிழ் ரீமேக்கை நடிகர் அருண் பாண்டியன் தயாரிக்கவுள்ளதாகவும், அதில் அவரும், அவரது மகள் கீர்த்தி பாண்டியனுமே நடிக்கவுள்ளதாகவும் ஏற்கெனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com