ஜனநாயகன்
ஜனநாயகன்web

ஜனநாயகன் திரைப்பட வழக்கு.. இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை!

ஜனநாயகன் திரைப்பட தணிக்கை சான்று குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது..
Published on
Summary

விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் தொடர்பான தணிக்கை வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் தணிக்கை தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவிருக்கிறது. ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக படத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது.

படத்தை மறு ஆய்வு செய்ய கோரிய தணிக்கை வாரியத்தின் உத்தரவிற்கு தனி நீதிபதி தடை விதித்திருந்த நிலையில், மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை டிவிசன் பெஞ்ச், தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதித்தது.

Jana Nayagan movie Censor Issue Full Details
VijayJana Nayagan

இதனை எதிர்த்து படத் தயாரிப்புநிறுவனம் உச்ச நீதிமன்றத்தை நாடியசூழலில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் முறையிட நீதிபதிகள் அறிவுறுத்தினர். அதன்படி, சென்னை டிவிசன் பெஞ்ச் தீர்ப்பை எதிர்த்து, படத் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா, நீதிபதி அருள் அமர்வில் இன்று காலை 11.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.

ஜனநாயகன்
ஜனநாயகன் | ’வழக்கை விசாரிக்க விருப்பமில்லை..’ தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com