Vijay
VijayJana Nayagan

ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா மட்டுமல்ல.. விஜயின் பயணத்தை விவரிக்கும் கலைவிழா

ஜனநாயகனுக்காக மலேசியாவில் நடைபெறும் நிகழ்வை, இசை வெளியீட்டு விழாவாக மட்டுமின்றி, விஜயின் திரைப்பயணத்தை விவரிக்கும் கலை விழாவாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
Published on

ஜனநாயகனுக்காக மலேசியாவில் நடைபெறும் நிகழ்வை, இசை வெளியீட்டு விழாவாக மட்டுமின்றி, விஜயின் திரைப்பயணத்தை விவரிக்கும் கலை விழாவாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

Vijay
VijayJana Nayagan

3 தசாப்தங்களின் ரசிகர்களை தன்வசம் கொண்டுள்ளார் விஜய். இவரின் படங்களைப் போலவே, இசை வெளியீட்டு விழாவும் மிகப் பிரபலம். ஆனால், ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவை வெறும் பட நிகழ்வாக அல்லாமல் விஜயின் சினிமா பாதையை சொல்லும் நிகழ்வாக திட்டமிட்டிருக்கிறது, தயாரிப்பு நிறுவனம். அதனாலேயே இதற்கு தளபதி கச்சேரி என தலைப்பிடப்பட்டுள்ளது. ஜனநாயகன் இசை வெளியிடுவதற்கு முன்பாக சிறப்பான சில தருணங்களை உருவாக்க பிரமாண்டமாக திட்டமிடப்பட்டுள்ளது. விஜயின் படங்களில் பாடல் பாடிய 30க்கும் மேற்பட்ட பாடகர்களை தயாரிப்பு நிறுவனம் களத்தில் இறக்கியிருக்கிறது.

விஜய், பாடல்களுக்கு பெயர் பெற்றவர் என்பதால், அவரின் பாடல்களை வைத்து சிறப்பு நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது. அவரின் திரைப்பயணத்துக்கு மதிப்பளிக்கும் விதமாக பிரத்யேக காணொலி உருவாக்கப்பட்டுள்ளது. அது இசை வெளியீட்டு விழாவில் திரையிடப்படும் என கூறப்படுகிரது. அதோடு, விஜயின் நெருக்கமான வட்டாரத்தில் உள்ள பிரபலங்கள் அனைவரும் மலேசியாவுக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரையும் வைத்து நெகிழ்வான நிறைவுத் தருணத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com