\
சாகசங்களைக் குறைத்துக் கொள்ள ஜேம்ஸ்பாண்ட் முடிவு

சாகசங்களைக் குறைத்துக் கொள்ள ஜேம்ஸ்பாண்ட் முடிவு

சாகசங்களைக் குறைத்துக் கொள்ள ஜேம்ஸ்பாண்ட் முடிவு
Published on

ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் மீண்டும் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டாலும் சாகசக் காட்சிகளைக் குறைத்துக் கொள்ளப் போவதாக பிரிட்டன் நடிகர் டேனியல் கிரெய்க் கூறியிருக்கிறார். 

ஸ்பெட்டர் உள்ளிட்ட படங்களில் சாகசக் காட்சிகளில் நடிக்கும்போது பல முறை அவருக்குக் காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதனால் சாகசக் காட்சிகளில் நடிக்க வேண்டாம் என அவரது மனைவியும், நடிகையுமான ரேச்சல் வேய்ஸ் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, சாகசக் காட்சிகளைக் குறைத்துக் கொள்ளப் போவதாக டேனியல் கிரெய்க் கூறியிருக்கிறார். 49 வயதான டேனியல் கிரெய்க், அடுத்த ஜேம்ஸ்பாண்ட் படத்தில் நடிக்க இருப்பதை கடந்த வாரம் உறுதி செய்தார். 2019-ஆம் ஆண்டு வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com