சினிமா
ஜேம்ஸ் பாண்ட் ஹீரோயின் டனியா மல்லெட் காலமானார்!
ஜேம்ஸ் பாண்ட் ஹீரோயின் டனியா மல்லெட் காலமானார்!
பிரபல ஜேம்ஸ்பாண்ட் நடிகை டனியா மல்லெட் காலமானார். அவருக்கு வயது 77.
‘ஜேம்ஸ்பாண்ட்’ திரைப்பட வரிசையில் மூன்றாவதாக வந்த படம் ’கோல்ட்பிங்கர்’. 1964 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் சீன் கானரி, பாண்ட் ஆக நடித்தார். கய் ஹமில்டன் இயக்கிய இந்தப் படத்தில் பாண்ட் காதலியாக நடித்தவர் டனியா மல்லெட் (Tania Mallet).
இந்த ஒரு படத்தில்தான் அவர் பெரிய கேரக்டரில் நடித்தார். அடுத்து த நியூ அவெஞ்சர்ஸ் என்ற டிவி தொடரில் நடித்தார். பிறகு சினிமாவில் நடிக்காமல், மாடலிங்கில் ஈடுபட்டு வந்தார்.
சினிமா தயாரிப்பாளர்கள் போடும் ஒப்பந்தங்களில் இருக்கும் கட்டுப்பாடுகள் பிடிக்காமல் நடிப்பதை இவர் கைவிட்டார் என்று கூறப்படு கிறது. இந்நிலையில் தனது 77 வயதில் மார்ச் 30 ஆம் தேதி காலமானார். இதை ஜேம்ஸ்பாண்ட் ட்விட்டர் தளம் பதிவிட்டுள்ளது.