ஜல்லிக்கட்டு சீன மொழி போஸ்டர் வெளியீடு

ஜல்லிக்கட்டு சீன மொழி போஸ்டர் வெளியீடு

ஜல்லிக்கட்டு சீன மொழி போஸ்டர் வெளியீடு
Published on

ஜல்லிக்கட்டு ஜனவரி 5-23, 2017 என்று ஒரு படம் உருவாகியுள்ளது. அந்தப் படத்தின் சீன மொழி போஸ்டர் ஹாங்காங் நகரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மக்கள் திரண்டு போராடிய போராட்டத்தை முன் வைத்து தயாராகி உள்ள திரைப்படம் ஜல்லிக்கட்டு 5-23, 2017 .இந்தப் படத்தின் சீன மொழி போஸ்டரை ஹாங்காங் நகரத்தில் அறிமுகம் செய்து வைத்துள்ளது படக்குழு. ஹாங்காங் வரலாற்றில் நடந்த மிக முக்கியமான இளைஞர் போராட்டமான அம்பர்லா மூமெண்ட் அட்மிரேட்லி முனையை தேர்ந்தெடுத்து இதனை அறிமுகம் செய்துள்ளார்கள். 

கடந்த 2014ம் ஆண்டு ஹாங்காங்கில் நியாயமான தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அப்பகுதி இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இடத்தில், ஜல்லிக்கட்டு 5-23 2014 தமிழ் திரைப்படத்தின் சீன மொழி போஸ்டர் வெளியிடப்படுவது அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் அவர்களது போராட்ட உணர்வுக்கும் தரப்படும் மரியாதையாக கருதுவதாக படத்தின் இயக்குனர் சந்தோஷ் கோபால் கூறியிருக்கிறார். 
இந்த முழு நீளத் திரைப்படத்தை சந்தோஷ் கோபால் இயக்க, அஹிம்சா புரொடக்ஷன்ஸ் சார்பில் நிருபமா தயாரிக்கிறார். ரமேஷ் வினாயகம் இசையமைத்திருக்கிறார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com