\
Jailer 2 movie release date conformed sun pictures company
Jailer 2Rajinikanth

'ஜெயிலர் 2’ ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா? சன் பிக்சர்ஸ் சொன்ன அதிரடி பதில்!

ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ வெளியீடு குறித்து பரவிய குழப்பத்துக்கு சன் பிக்சர்ஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
Published on

செய்தியாளர்: எம்.மீரா

ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போவதாகப் பரவி வந்த வதந்திகளுக்குத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 2023-இல் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. இதில் ரஜினிகாந்த், 'முத்துவேல் பாண்டியன்' கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் தாமதமாவதால், வெளியீட்டுத் தேதி தள்ளிப்போகலாம் என இணையத்தில் தகவல்கள் பரவின.

இதனால் ரசிகர்கள் மத்தியில் குழப்பம் நிலவிய நிலையில், ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 15-ஆம் தேதியே படம் தியேட்டர்களில் வெளியாகும் என்றும், தேதியில் எந்த மாற்றமும் இல்லை என்றும் சன் பிக்சர்ஸ் தெளிவுபடுத்தியுள்ளது.

இப்படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான அலா போலேலோ’ பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

முதல் பாகத்தில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், யோகி பாபு ஆகியோருடன் மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோரின் சிறப்புத் தோற்றங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இரண்டாம் பாகத்திலும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ளதால், முதல் பாகத்தைவிட இது மேலும் பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com