”ஜெய் பீம் தவறவிடக்கூடாதப் படம்” - கார்த்திக் சுப்பராஜ்
இன்று வெளியாகியுள்ள சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்தை இயக்குநர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
இயக்குநர் தா.செ.ஞானவேல் எழுதி இயக்கும் ’ஜெய் பீம்’ படத்தை தயாரித்து நடித்துள்ளார் சூர்யா. ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருக்கும்போது இருளர் இன மக்களுக்காக வாதாடிய ஒரு வழக்கினையே அடிப்படையாகக் கொண்டு ‘ஜெய் பீம்’ படத்தினை எடுத்திருக்கிறார்கள்.
இன்று வெளியாகியுள்ள படம் குறித்து,’ஜெய் பீம்’ மிகவும் தைரியமாகவும் உண்மையாகவும் எடுக்கப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்டவர்களின் வலியை வெளிப்படுத்துகிறது. நீதித்துறையின் மீது நம்பிக்கையை விதைக்கிறது. தயவு செய்து தவறவிட்டுவிடாதீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்து ட்விட்டர் பக்கத்தில், ”ஜெய்பீம் பார்த்தேன். என்ன ஒரு அற்புதமான படம். மணிகண்டன், லிஜோ & ஒவ்வொருவருக்கும் கைத்தட்டல்கள். அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார்கள்.