\
ஜெய் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு ‘ஜருகண்டி’

ஜெய் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு ‘ஜருகண்டி’

ஜெய் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு ‘ஜருகண்டி’
Published on

ஜெய் நடிக்க உள்ள புதிய திரைப்படத்திற்கு  ‘ஜருகண்டி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக இருந்த பிச்சுமணி இயக்க உள்ள புதிய திரைப்படத்தில் நடிகர் ஜெய் நடிக்க உள்ளார். அந்தப் படத்திற்கு  ‘ஜருகண்டி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. வித்தியாசமான இந்தத் தலைப்பு பலரையும் ஈர்க்கும்படி உள்ளது. 
இந்தத் தலைப்பு குறித்து படத்தின் தயாரிப்பாளர் நிதின்சத்யா, “எல்லோரும் ஒரு நாடு ஒரு வரி’ என விரும்புகிறார்கள்.  ‘ஜருகண்டி’ என்பதை 'ஒரு நாடு ஒரு சொல்’ என்பதை குறிக்கும்படியாக வைத்திருக்கிறோம்.  ‘ஜருகண்டி’ என்பது மிகப் பிரபலமான வார்த்தை. நம் பேச்சுக்கு இடையில் இதை பயன்படுத்துகிறோம். அப்படி என்றால் தள்ளு என்று அர்த்தம். எங்கள் படத்தின் திரைக்கதை மிக வேகமாக இருக்கும். அதனால் இந்தத் தலைப்பை தேர்ந்தெடுத்திருகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com