துப்பாக்கியுடன் அதிரடி காட்டும் தனுஷ் - வெளியானது ‘ஜகமே தந்திரம்’ மோஷன் போஸ்டர்...!

துப்பாக்கியுடன் அதிரடி காட்டும் தனுஷ் - வெளியானது ‘ஜகமே தந்திரம்’ மோஷன் போஸ்டர்...!

துப்பாக்கியுடன் அதிரடி காட்டும் தனுஷ் - வெளியானது ‘ஜகமே தந்திரம்’ மோஷன் போஸ்டர்...!
Published on

அஜித் விஜய் படங்களை அடுத்து ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருப்பது தனுஷின் பட அப்டேட்டுகளுக்காகத் தான் என்றால் அது மிகையல்ல. வடசென்னை, அசுரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வருகிறார். ரஜினி நடிப்பில் பேட்ட திரைப்படத்தை இயக்கிய பிறகு தனுஷுடன் இணைந்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். இது பேட்ட படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது.

இந்தப் படம் குறித்த அறிவிப்புகள் டி40 என்ற பெயரிலேயே வழங்கப்பட்டு வந்தன. இப்படத்தில் தனுஷ் வேட்டி சட்டையுடன் கையில் அறிவாள் வைத்திருக்கும் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டு வைரல் ஆனது. ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் நடித்துள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

பேட்ட படத்திற்கு அனிருத் இசையில் வெளியான மோஷன் போஸ்டர் பெரிய ஹிட் அடித்தது. அதே போல சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியிருக்கும் தனுஷின் D40 படத்தின் மோஷன் போஸ்டரும் பெரிய ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், படத்திற்கு ஜகமே தந்திரம் எனவும் பெயரிடப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com