\
ஏழு நாடுகளில் முதல் இடம் பிடித்து 'ஜகமே தந்திரம்' சாதனை

ஏழு நாடுகளில் முதல் இடம் பிடித்து 'ஜகமே தந்திரம்' சாதனை

ஏழு நாடுகளில் முதல் இடம் பிடித்து 'ஜகமே தந்திரம்' சாதனை
Published on: 

தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படம் 7 நாடுகளில் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில், சசிகாந்த் தயாரித்த ஜகமே தந்திரம் திரைப்படம் கடந்த 18ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடப்பட்டது. 190 நாடுகளில் 17 மொழிகளில் இந்தப் படம் வெளியானது. கேங்ஸ்டர் வகையில் எடுக்கப்பட்ட ஜகமே தந்திரம் திரைப்படம் தமிழகத்தில் கலவையான விமர்சனமே பெற்றது. இருந்தாலும் தனுஷின் ரசிகர்கள் படத்தை கொண்டாடினர்.

இந்த நிலையில் ஜகமே தந்திரம் திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள 12 நாடுகளில் அதிகம் பார்க்கப்பட்ட படங்களின் பட்டியலில் முதல் 10 இடங்களில் இடம் பிடித்துள்ளது. அதில் மலேசியா, அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியா உட்பட 7 நாடுகளில் முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த திரைப்படத்தில் தனுஷுடன் ஐஸ்வர்ய லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், சௌந்தர்ராஜன், பாபா பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார்.

- செந்தில் ராஜா

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com