'ஜகமே தந்திரம்' விமர்சனம்: முழு திருப்தி தராத 'பிரமாண்ட' முயற்சி!

'ஜகமே தந்திரம்' விமர்சனம்: முழு திருப்தி தராத 'பிரமாண்ட' முயற்சி!

'ஜகமே தந்திரம்' விமர்சனம்: முழு திருப்தி தராத 'பிரமாண்ட' முயற்சி!
Published on

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் 'ஜகமே தந்திரம்'. பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று நெட்ஃபிளிக்ஸில் களமிறங்கி இருக்கிறது இப்படம்.

மதுரையில் உள்ளூர் கேங்ஸ்டர் சுருளியாக வலம்வரும் தனுஷுக்கு லண்டனில் இருக்கும் ஒரு கேங்ஸ்டர் குழுவிற்காக வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. லண்டன் மண் லண்டன்வாசிகளுக்கே என நினைக்கும் லண்டனின் சீமான் போல வலம் வரும் அவ்வூர் தாதா பீட்டரின் குழுவில் இணைகிறார் தனுஷ். பீட்டருக்காக அவரின் எதிரி கேங்கிடம் மோதுகிறார் அவர். பீட்டருடன் இணைந்து தனுஷ் லண்டனில் எதிர்க்கும் கேங் ஆட்கள் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள். பிறகு ஒரு தமிழனாக தமிழர்களை எதிர்ப்பது தவறு என உணரும் தனுஷ் என்ன முடிவு எடுத்தார், லண்டன் மண் லண்டன்வாசிகளுக்கே என வீர முழக்கமிடும் பீட்டரின் நிலை என்ன ஆனது என்பதே படத்தின் திரைக்கதை.

படத்தின் நிறைகளை முதலில் பேச வேண்டுமென்றால் 'ஜகமே தந்திரம்' படத்தில் ஒளிப்பதிவிற்கே முதலிடம். உலகத் தரமான ஒளிப்பதிவை செய்து அசத்தியிருக்கிறார் இதன் ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா. ஒளிப்பதிவை அடுத்து இப்படத்தின் பின்னணி இசை அருமை. அதற்கு சந்தோஷ் நாராயணனுக்கு பாராட்டுகள். தனுஷின் நடிப்புக்கு தீனி போடும் திரைக்கதை இது இல்லை என்று நினைக்கத் தோன்றுகிறது. அதனால் கார்த்திக் சுப்பராஜின் இந்த சுமாரான திரைக்கதையில் 'ஜஸ்ட் லைக் தட்' ஆக நடித்துத் தள்ளி இருக்கிறார் தனுஷ். எனினும், தனுஷ் ரசிகர்களுக்கு இப்படம் நல்ல விருந்து.

இயக்குநராக கார்த்திக் சுப்பராஜ் ரசிகர்கள் மனதை திருப்திபடுத்தவில்லை. துளியும் தமிழ் ரசிக மனதிற்கு ஒட்டாத காட்சி அமைப்புகள். லாஜிக் இல்லாத ஹீரோயிஸம். இலங்கை மக்களின் பிரச்னைகளை நுணிப்புல் அளவே உணர்ந்து அதனை இக்கதையில் இணைத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். தங்கம் ஆயுதக் கடத்தல்களில் இலங்கைத் தமிழர்களை தொடர்புபடுத்தி காட்சிகளை அமைத்திருப்பது வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சுவது போல வேதனையளிக்கிறது.

இவை ஒருபுறம் இருந்தாலும், கார்த்திக் சுப்பராஜின் மிகப் பெரிய முயற்சியாக இந்த சினிமாவை பார்க்கலாம். முழுக்க முழுக்க இந்திய எல்லைக்கு வெளியே ஒரு பெரிய பொருட்செலவில் உருவாகி இருக்கும் இந்த சினிமா திரையரங்குகளில் வெளியாகி இருந்தால் இன்னுமே நல்ல ரிசல்ட்டை கொடுத்திருக்கும். படத்தின் நீளத்தை கொஞ்சம் அல்ல, ரொம்பவே குறைத்திருக்கலாம்.

கலவையாக சொல்ல வேண்டுமென்றால், முழு திருப்தியைத் தராத ஒரு சுமாரன சினிமாவாக ஜகமே தந்திரத்தை ஏற்றுக் கொள்ளலாம். பெட்டர் லக் நெஸ்ட் டைம் டீம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com