\
நடிகை ரகுல் ப்ரீத் சிங்  - பாலிவுட் நடிகர் ஜாக்கி பக்னானி காதல்: இன்ஸ்டாகிராமில் ரொமான்ஸ்

நடிகை ரகுல் ப்ரீத் சிங் - பாலிவுட் நடிகர் ஜாக்கி பக்னானி காதல்: இன்ஸ்டாகிராமில் ரொமான்ஸ்

நடிகை ரகுல் ப்ரீத் சிங் - பாலிவுட் நடிகர் ஜாக்கி பக்னானி காதல்: இன்ஸ்டாகிராமில் ரொமான்ஸ்
Published on

பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானி, நடிகை ரகுல் ப்ரீத் சிங்குடனான தனது காதலை இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.

நடிகை ரகுல் பிரீத்தி சிங்கின் பிறந்தநாளான இன்று, ஜாக்கி பக்னானி தனது காதலியான ரகுல் ப்ரீத் சிங்குடன் இருக்கும் ஒரு படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, "நீ இல்லாமல், என் நாட்கள் நாட்களாகத் தெரியவில்லை. நீ இல்லாமல், மிகவும் சுவையான உணவை சாப்பிடுவது சுவையாக இருக்காது. எனது உலகத்தை அர்த்தப்படுத்தும் மிக அழகான ஆன்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை அனுப்புகிறேன். உங்கள் நாள் உங்கள் புன்னகையைப் போல வெயிலாகவும், உங்களைப் போல அழகாகவும் இருக்கட்டும். பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் அன்பே" என தெரிவித்தார்.

View this post on Instagram

A post shared by Rakul Singh (@rakulpreet)

ரகுல் ப்ரீத் சிங்கும் இந்த படத்தை பகிர்ந்து, "நன்றி என் அன்பே இந்த ஆண்டு நீ எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு! என் வாழ்க்கையில் வண்ணம் சேர்த்ததற்கு நன்றி" என தெரிவித்திருக்கிறார். ஜாக்கி பக்னானியின் பூஜா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் க்‌ஷய் குமாருடன் இணைந்து ரகுல் பிரீத் சிங் நடிக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com