அன்று இதேநாளில் வெளியான ‘யூத்’: விஜய்யுடனான படங்களைப் பகிர்ந்து நினைவுகூர்ந்த இயக்குநர்

அன்று இதேநாளில் வெளியான ‘யூத்’: விஜய்யுடனான படங்களைப் பகிர்ந்து நினைவுகூர்ந்த இயக்குநர்
அன்று இதேநாளில் வெளியான ‘யூத்’: விஜய்யுடனான படங்களைப் பகிர்ந்து நினைவுகூர்ந்த இயக்குநர்

கடந்த 2002-ஆம் ஆண்டு விஜய், ஷாகின் கான் நடிப்பில் வெளியான ‘யூத்’ இதே ஜூலை 19-ஆம் தேதிதான் வெளியானது. இன்று ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பை மாணவர்கள் ஆர்வமுடன் படிக்கிறார்கள். அன்று அப்படியொரு படிப்பு குறித்து சரியான புரிதல் இல்லாத சமூகத்திற்கு ’யூத்’ படத்தில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்தவராக நடித்து கவனம் ஈர்த்தார் விஜய்.

படம் ஹிட் அடித்ததோடு பாடல்களும் இப்போதும் தமிழகமெங்கும் பல்வேறு விழாக்களில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

சிம்ரனுடன் விஜய் நடனமாடிய ‘ஆல்தோட்ட பூபதி’ பாடல், சமீபத்தில்கூட பிடித்தப் பாடல் என்றுக்கூறி ஆட்டம் போட்டார் நடிகை கீர்த்தி சுரேஷ். ’சர்க்கரை நிலவே’ அப்போதைய சிங்கிள்ஸ்களின் கீதமாகவே மாறிப்போனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், யூத் வெளியாகி 19 ஆண்டுகள் ஆனதையொட்டி இயக்குநர் வின்சென்ட் செல்வா விஜய்யுடன் இருக்கும் ஷூட்டிங் புகைப்படங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com