''அற்புதமானவர், அழகி, போராளி'' - நயன்தாராவை புகழ்ந்து தள்ளிய கத்ரீனா கைஃப்
பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் அழகுசாதன பொருட்கள் நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இது தொடர்பான விளம்பரத்தில் அவர் தற்போது ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் அவரது நிறுவனத்தின் விளம்பரத்திற்காக நடிகை நயன்தாரா மும்பை சென்றுள்ளார். இதற்காக நன்றி தெரிவித்துள்ள கத்ரீனா கைஃப், ''கே பியூட்டி விளம்பரத்தின் ஒரு பகுதிக்காக, தனது பரபரப்பான நேரத்திற்கு இடையில் மும்பைக்கு வந்த அழகியான தென்னிந்திய சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு பெரும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பேட்டி ஒன்றில் நயன்தாரா குறித்து பேசிய கத்ரீனா கைஃப், ''நயன்தாரா அற்புதமானவர்.அவர் ஒரு போராளி. கடுமையான உழைப்பால் சிறு வயதிலேயே சினிமாக்குள் வந்தவர். என் குணங்களும், நயன்தாரா குணங்களும் ஒத்துப்போகும். அவரைப்பார்த்தால் என்னைப் பார்ப்பது போலவே உள்ளதாக என் குழுவினரிடம் நான் தெரிவித்துக் கொண்டு இருப்பேன்'' எனத் தெரிவித்தார்