“இதை செய்வதற்கு பெரிய மனசு வேண்டும் விஜய் சேதுபதி” - குஷ்பு பாராட்டு

“இதை செய்வதற்கு பெரிய மனசு வேண்டும் விஜய் சேதுபதி” - குஷ்பு பாராட்டு

“இதை செய்வதற்கு பெரிய மனசு வேண்டும் விஜய் சேதுபதி” - குஷ்பு பாராட்டு
Published on

விஜய் சேதுபதி குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என பாஜக பிரமுகர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்சேதுபதி, முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதாக இருந்தது. இதற்கு தமிழ் பிரபலங்கள், அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து அப்படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலகியுள்ளார்.

இதைத்தொடர்ந்து விஜய்சேதுபதியின் மகளுக்கு ட்விட்டர்வாசி ஒருவர் பாலியல் ரீதியாக மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த ட்விட்டர்வாசி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விஜய்சேதுபதியின் குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்த சம்பவத்திற்கு பிரபலங்கள், நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பாஜக பிரமுகர் குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்புள்ள விஜய் சேதுபதி, நீங்கள் ஒரு வலிமையான நபர். நீங்கள் இருப்பது போலவே இருங்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் வந்திருப்பது காட்டுமிராண்டித்தனமானது. விசாரிக்கப்பட வேண்டும். குற்றவாளியைக் கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும். நீங்கள் செய்ததைச் செய்ய ஒரு பெரிய மனசு வேண்டும். நாங்கள் உங்களுடன் ஒற்றுமையுடன் நிற்கிறோம்” எனத் தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com