கபடி-க்கு வருகிறார் ’அம்மா கணக்கு’ இயக்குனர்!

கபடி-க்கு வருகிறார் ’அம்மா கணக்கு’ இயக்குனர்!

கபடி-க்கு வருகிறார் ’அம்மா கணக்கு’ இயக்குனர்!
Published on

அமலா பால், ரேவதி, சமுத்திரக்கனி நடித்த ’அம்மா கணக்கு’ படத்தை இயக்கியவர் அஸ்வினி ஐயர் திவாரி. இந்தப் படம் அவர் இந்தியில் இயக்கிய, ’நில் பட்டே சன்னட்டா’ என்ற படத்தின் ரீமேக். 

இந்தப் படத்தை அடுத்து அவர் ’பரெய்லி கி பார்பி’ என்ற இந்திப் படத்தை இயக்கினார். இப்போது கபடியை பற்றி படம் இயக்க இருக்கிறார். இதுபற்றி அஸ்வினி ஐயர் திவாரி கூறும்போது, ’மனதுக்கு நெருக்கமான கதைகளைச் சொல்ல வேண்டும் என்று நினைப்பவள் நான். மற்ற விளையாட்டுகள் போல கபடியும் சமீப காலமாக பிரபலமாகி வருகிறது. இதற்கு புரோ கபடி லீக் போட்டிகளும் காரணம். கபடியின் பின்னணியில் சில பிரச்னைகளைச் சொல்கிறேன். அடுத்த வருடம் படம் தொடங்கும். மற்ற விஷயங்கள் இன்னும் முடிவாகவில்லை’ என்றார். பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.

ஏற்கனவே, கிரிக்கெட், குத்துச் சண்டை, கால்பந்து பற்றிய படங்கள் வந்துவிட்டன. இப்போது கபடி பற்றிய படம் உருவாகிறது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com