லண்டனில் ’பிரேவ் ஹார்ட்’ நடிகருடன் மோதிய தனுஷ்!

லண்டனில் ’பிரேவ் ஹார்ட்’ நடிகருடன் மோதிய தனுஷ்!
லண்டனில் ’பிரேவ் ஹார்ட்’ நடிகருடன் மோதிய தனுஷ்!

ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோவுடன் நடிகர் தனுஷ் மோதிய சண்டைக் காட்சிகள் இங்கிலாந்தில் படமாக்கப்பட்டுள்ளன.

வெற்றிமாறன் இயக்கிய ’அசுரன்’ படத்துக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். இதில் தனுஷ் ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். கேங்ஸ்டர் கதையை கொண்ட படமான இதை, ஒய் நாட் ஸ்டூடியோஸ் சஷிகாந்த் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் இந்திய கேங்ஸ்டராக நடிக்கும் தனுஷ், ஐரோப்பிய கேங்க்ஸ்டருடன் மோதுவது போல கதை அமைக்கப்பட்டுள்ளது.

இதில் ஐரோப்பிய டான் கேரக்டரில், ஹாலிவுட் படங்களான ’பிரேவ் ஹார்ட்’, ’ஹைலேண்டர்’, ’வொண்டர் வுமன்’, ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ உட்பட பல படங்களில் நடித்த ஜேம்ஸ் காஸ்மோ நடிக்கிறார்.

இந்தப் படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் இங்கிலாந்தில் நடந்துள்ளது. இதற்காக தனுஷ் உட்பட படக்குழுவினர் சுமார் 70 நாட்கள் லண்டனில் முகாமிட்டிருந்தனர். ஜேம்ஸ் காஸ்மோவுடன் நடிகர் தனுஷ் மோதும் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com