\
வரி ஏய்ப்பா? - அன்புச்செழியனைத் தொடர்ந்து கலைப்புலி தாணு அலுவலகத்திலும் ஐடி ரெய்டு

வரி ஏய்ப்பா? - அன்புச்செழியனைத் தொடர்ந்து கலைப்புலி தாணு அலுவலகத்திலும் ஐடி ரெய்டு

வரி ஏய்ப்பா? - அன்புச்செழியனைத் தொடர்ந்து கலைப்புலி தாணு அலுவலகத்திலும் ஐடி ரெய்டு
Published on

சென்னையில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை டி.நகர் பிரகாசம் சாலையிலுள்ள கலைப்புலி பிலிம்ஸ் பிரைவேட் லிமிடேட் அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. 12க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இங்குதான் கலைப்புலி தாணுவின் அலுவலகம் கீழ்த்தளத்திலும், வீடு மேல்தளத்திலும் இருக்கிறது. சமீபத்தில் வெளியான படங்களில் கணக்கில் காட்டாமல் பணம் கையாடல் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியானதை அடுத்து, வரி ஏய்ப்பு நடந்திருப்பதாகக் கூறி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் காலை 5 மணியிலிருந்து ரெய்டு நடக்கும் நிலையில் தி.நகரில் தாணு அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. அன்புச்செழியனை பொருத்தவரை மதுரை, தேனி மற்றும் மேகமலை உள்ளிட்ட 30 இடங்கள் மற்றும் சென்னையில் 10 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இவர்கள்தவிர, மேலும் சில சினிமா ஃபைனான்சியர்கள் வீட்டிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com